இயற்கை அமைப்பின் இடர்க்கால உலருணவு வழங்கும் செயற்திட்டம்
வெளிமாவட்டங்களில் இருந்துவந்து இங்கு தங்கியிருந்து கல்விகற்கும் யாழ் பல்கலைக்கழக மாணவிகள் மற்றும் வருமானம் இழந்த சில குடும்பங்களுக்கான உலருணவு பொதிகள் புலம்பெயர் உறவு சகான் Jude Sakan அவர்களால் அவரது தங்கை சகானாவின் நினைவாக "சகோதரத்துவ உதவித்திட்டமாக" இன்று வழங்கப்பட்டது
உதவிகளை வழங்கிய சகான் அவர்களுக்கு இயற்கை அமைப்பின் சார்பில் மனமார்ந்த நன்றிகள்
புகைப்பட பதிவிற்கு மன்னிக்கவும் இருப்பினும்
கொடுக்கப்பட்டவர்களில் அதிகமானவர்களின் புகைப்படம் நாங்கள் பதிவிடுவதில்லை
வெளி மாவட்டங்களில் இருந்து வந்து தங்கி கல்விகற்கும் மாணவர்கள் குறித்து எவரும் சிந்திக்கவில்லை ஆகவே அவ்
விடயத்தை குறிப்பிட அவர்கள் அனுமதியோடு மட்டுமே புகைப்படம் எடுக்கப்பட்டது
இருப்பினும் நாங்கள் முகத்தை மறைத்துள்ளோம்
மாணவர்கள் நிலை உரிய தரப்பினரை சென்றடைய இந்த புகைப்படம் அவசியம் என என்னுகின்றேன்
ஒருசில மாணவர்களுக்கு மட்டுமே எம்மால் உதவ முடிந்தது மிகுதி?
No comments:
Post a Comment